சோனியா பூரண குணமடைய வேண்டி திருப்பதியில் ஆந்திர துணை முதல்வர் மொட்டை
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பூரண குணமடைய வேண்டும் என்பதற்காக ஆந்திர துணை முதல்வர் தாமோதர் ராஜ நரசிம்மா திருப்பதி கோவிலில் மொட்டை அடித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது. வெற்றிகரமான அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.
தற்போது அவரது நிலை பரவாயில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் இந்திய அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்து வருவதாகத் தெரிகிறது.
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து செப்டம்பர் முதல் வாரத்தில் அவர் டெல்லி திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா காந்திக்கு உடல் நிலை குணமடைய கட்சித் தொண்டர்கள் கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதர் ராஜ நரசிம்மா சோனியா பூரண குணமடைந்து பழையபடி சுறுசுறுப்பாக இருக்க வேண்டிக் கொண்டு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் மொட்டை அடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications