அன்னா விவகாரம்: லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி, ஒத்திவைப்பு
டெல்லி: அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதம் அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்று மத்திய அரசு கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இன்று பாஜக உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
லோக்சபா இன்றுகாலை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர் மீராகுமார். அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதம் அவருடைய தனிப்பட்ட போராட்டம், அதற்கு அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். மத்திய அரசு எப்படி இப்படிக் கூறலாம் என்று கேட்டார்.
இதையடுத்து பிரணாப் முகர்ஜி எழுந்து இதுகுறித்து விளக்கமளித்தார். தான் அப்படிக் கூறவே இல்லை என்று அவர் மறுத்தார். ஆனால் பாஜக உறுப்பினர்களும், இடதுசாரி உறுப்பினர்களும் எழுந்து அமளியில் குதித்தனர்.
சபாநாயகர் இருக்கை முன்பு கூடி பிரணாபின் கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அமளி அதிகரித்தது. இதையடுத்து 11.30 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதே நிலைதான் ராஜ்யசபாவிலும், அங்கும் அமளி ஏற்படவே அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications