சித்த மருத்துவப் படிப்பை முடக்க எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சதி: மாணவர்கள் குற்றச்சாட்டு
நெல்லை: சித்த மருத்துவப் படிப்பை செல்லாக் காசாக்க டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் முயற்சி செய்வதாக சித்தா கல்லூரி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சித்த மருத்துவப் படிப்பில் உள்ள நவீன அறிவியல் பாடங்களை அதாவது உடல் வேதியியல், உடல் செயலியல், உடற்கூறுகள், அறுவை மருத்துவம், நோய் நாடல், நுண்ணியிரியல், மருந்தியல் என அனைத்து விதமான பாடங்களில் திருத்தம என்று கூறி முக்கிய பகுதிகளை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. இந்த பாடத் திட்டத்தையே அமுல்படுத்துவோம் என்று இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலிடமும் தெரிவித்துள்ளது.
அதற்கு இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் கண்டித்தும் அதை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் பொருட்படுத்தவில்லை.
மேலும் இதுவரை வழங்கி வந்த பட்டங்களின் பெயர்களில் உள்ள சர்ஜரி என்ற வார்த்தையை நீக்கியுள்ளது. உதரணமாக (பிஎஸ்எம்எஸ்), பிஏஎம்எஸ், பியூஎம்எஸ், பிஎச்எம்எஸ் என்பனவற்றில் சர்ஜரி என்ற வார்த்தையை நீக்கம் செய்து பிஎஸ்எம், பிஏஎம், பியூஎம், பிஎச்எம் என வழங்குவோம் என்று இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 1970-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி பாடத்திட்ட திருத்தத்தையும், பட்டப்படிப்பின் பெயரையும் மாற்றினால் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய மருத்துவ முறை பட்டங்கள் வழங்கும் அதிகாரம் ரத்து செய்யப்படும் என்றும், மீறி வழறங்கினால் அந்த பட்டம் மாநில இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications