சீன தொழிற்சாலையில் தீவிபத்து: 14 பேர் பலி
பீஜிங்: சீனாவில் செராமிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், 14 பேர் உடல் கருதி பலியாகினர்.
சீனாவின் தென்பகுதியில் உள்ள போஷ்சன் நகரில் ஷின்பிங் என்ற செராமிக் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலை 4 மாடி கட்டிடத்தை கொண்டது. நேற்று 4வது மாடியில் பிடித்த தீ கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதனால், தொழிற்சாலை பணியாளர்கள் இங்கு அங்குமாக ஓடினர். சிலர் உயிர்பிழைக்கும் எண்ணத்தில், மாடியில் இருந்து கீழே குதித்தனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், தீக்காயமடைந்த 14 பேர் பலியாகினர். மேலும் மாடியில் இருந்து குதித்த ஒருவர் படுகாயமடைந்தார். இறந்தவர்களில் பலர் உயிர் பிழைக்க மாடியில் இருந்து குதித்தவர்கள் என தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார்.
லேசான தீக்காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை தகுந்த தீத்தடுப்பு வசதிகள் செய்யாமல் விட்டதே, தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. தொழிற்சாலையின் உரிமையாளரை கைது செயத போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அனுமதியில்லாத கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications