தயவு செய்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு பிரதமர், சோனியா கோரிக்கை

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித மாற்றுமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது,
நான் அன்னா ஹஸாரேவை பாராட்டுகிறேன், வணங்குகிறேன். உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அவரை மீண்டும் கேட்டுக்கொள்ளப் போகிறேன். அன்னாவின் கருத்துகள் அனைத்தும் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவரிடம் தெரிவிக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற நிலைக்குழு ஜன் லோக்பால் மசோதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஊழல் ஒரு தேசியப் பிரச்சனை. அதை ஒழிக்க ஆளும் மத்திய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு என்ன நடவடிக்கை எல்லாம் எடுக்க முடியுமோ, அத்தனையும் எடுக்கும். எனது சொத்துக்களை கணக்கிடுவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றும் இல்லை. என் மீது குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள் அந்த புகார்களை நிரூபித்துக் காட்டட்டும். ஒருவர் மீது ஒருவர் குறை கூற இது சரியான நேரம் அன்று என்றார்.
இதற்கிடையே அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அன்னா ஹஸாரேவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பூதாகரமாக வெடித்துள்ள அன்னா ஹஸாரே விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கவலை அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications