தினமும் செத்து செத்து பிழைக்கிறது ஈழத்தமிழினம்: சீமான் வேதனை

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்கிளப்பில் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு தமிழ்ப் பெண்களின் மார்பகங்களை அறுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களின் நடமாட்டம் இப்போது தொடர்ந்து தமிழர் வாழும் பகுதிகளில் பரவி வருகிறது.
வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை காணப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் வெகுண்டு ழுந்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள நாவாந்துறை எனும் மீனவ கிராமத்தில் திங்கட்கிழமை இரவு இப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் நுழைந்துள்ளனர்.
அவர்களை கண்ட அங்கிருந்த மக்கள் துரத்திப்பிடிக்க முயன்றுள்ளனர். அந்த மூன்று பேரும் அங்கிருந்த ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து தப்பித்துள்ளனர். இதைக் கண்ட மக்கள் ராணுவ முகாமை முற்றுகையிட்டுள்ளனர். மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதற்கு சிங்கள ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் கோபமுற்ற மக்கள் அங்கிருந்த ராணுவ வாகனங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். மக்களை கலைக்க ராணுவமும், காவல் துறையினரும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னர், நள்ளிரவில் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் நிலையங்களுக்கு இழுத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.
இந்த விவரங்கள் அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எமக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாகும். இதனை சில இலங்கை ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மார்பகங்கள் அறுக்கப்படுவது, பெண்களின் ரத்தத்தை எடுத்து சென்று யாகக் குண்டத்தில் ஊற்றுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முடிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவ செயலாளர் கோத்தபயா ராஜபக்சே மிரட்டியுள்ளார்.
ஆனால் ஒரு மாத காலத்திற்கும் மேலாக இப்படி கிரீஸை தடவிக் கொண்டு, தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை செய்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இதிலிருந்து இந்த குற்றப் பின்னணியில் சிங்கள ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பது தெரிகிறது. இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுவதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அங்கு தமிழ் பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்திய மத்திய அரசு இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடருமானால், இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்படும். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் தமிழினம் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட கொடூரமான வன்முறைகளை ஐ.நா.அவையின் பார்வைக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடமும் தமிழக முதல்வர் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து இன்று நடைபெற உள்ள விவாதத்தில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு உறுப்பினர்கள், தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எடுத்து கூறிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications