நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
பெரியபாளையம்: நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரது விரலை கடித்து துப்பியவரை கைது செய்ய கோரி பெண்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், கடித்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரியபாளையம் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் சுதாகர் (28), இவரது நண்பர்கள் சித்திக் மற்றும் அன்சாரி. கடந்த சனிக்கிழமை இரவு தனது ஹோட்டலை பூட்டிய சுதாகர், வீட்டிற்கு நடந்து சென்றார். வழியில், சித்திக்கும் அன்சாரியும் குடிபோதையில் கிடந்தனர்.
அவர்களை சாலையின் ஒரமாக இழுத்து கொண்டு வந்தார். அப்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். குடிபோதையில் இருந்த அன்சாரி, சுதாகரின் விரலை கடித்து துப்பினார்.
அதற்குள் சம்பவ இடத்தில் கூடிய அப்பகுதியினர், நண்பர்கள் 3 பேரையும் பிரித்துவிட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதுகுறித்து, அன்சாரியும், சுதாகரும் தனித்தனியாக பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் யாரையும் கைது செய்த நிலையில், சுதாருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பெரியபாளையம் போலீஸ் நிலையம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். முற்றுகையி்ல் ஈடுபட்டவர்களை ஆறுதல்படுத்திய போலீசார், நண்பரின் விரலை கடித்து துப்பிய அன்சாரியை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications