நில அபகரி்ப்பு வழக்கில் மு.க. ஸ்டாலின் மச்சான் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரண்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மைத்துனர் ராஜமூர்த்தி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்கள் மீதான விசாரணை துரிதப்பட்டுள்ளதை அடுத்து ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நில அபகரிப்பு வழக்குகளில் திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் தவிர திமுக நிர்வாகிகளின் உறவினர்கள் சிலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிறிஸ்தவ அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர் ராஜமூர்த்தி அபகரித்துவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+