"ஆப்பிள்"-ன் சிறப்பான ஆண்டுகள் இனி தான வரவிருக்கிறது: சிஇஓ டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் விலகியதையடுத்து டிம் குக் அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.
டிம் குக் ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் கூறியிருப்பதாவது,
குழுவிற்கு,
உலகின் மிக சிறந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஆப்பிள் நிறுவனத்தில் தான் சேர்ந்தது தான் என் வாழ் நாளில் நான் செய்த நல்ல காரியம். ஆப்பிள் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸுடன் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருவது எனக்கு கிடைத்த கௌரவம். ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்க நான் ஸ்டீவ் போன்று பாசிட்டிவாக இருப்பேன்.
ஸ்டீவ் ஒரு சிறந்த தலைவர். நமக்கெல்லாம் அவர் தான் வழிகாட்டி. ஸ்டீவ் சேர்மனாக இருந்து நம்மை வழிநடத்த வேண்டும்.
ஆப்பிள் நிறுவனத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படாது என்பதை நம்புங்கள். நான் ஆப்பிள் நிறுவனத்தின் கொள்கைகளை மதிப்பவன். நாம் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பொருட்களை தயாரித்து வாடிக்கையாளர்களை மகிழ்விப்போம்.
நான் இந்த நிறுவனத்தை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் அனைவரும் அளித்து வரும் ஆதரவு ஊக்கமளிப்பதாக உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பான ஆண்டுகள் இனி தான் வரவிருக்கின்றன.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications