தேக்கடி படகு விபத்திற்கு படகு தான் காரணம்: விசாரணை அறிக்கை குற்றசாட்டு
திருவனந்தபுரம்: ஏரி, அணை ஆகியவற்றில் இயக்க தகுந்த வடிவமைப்பு இல்லாமல் இருந்ததே, தேக்கடி படகு கவிழ்ந்த விபத்திற்கு காரணம் எனத் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, கேரள மாநிலம் தேக்கடியில் அணைப்பகுதியில் சென்ற படகு கவிழ்ந்ததில், 45 பயணிகள் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து, நீதிபதி மொய்தீன் குஞ்சு தலையிலான குழுவை விசாரித்து வந்தது.
நேற்று இக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: விபத்தில் சிக்கிய படகு, ஏரி, அணை ஆகிய பகுதிகளில் இயக்க தகுந்த வடிவமைப்புடன் உருவாக்கப்படவில்லை. தண்ணீரில் மிதப்பதில் நிலையற்ற தன்மைக் கொண்டது. 2 அடக்குகளை கொண்ட அந்த படகில் 75 பேர் மட்டுமே பயணிக்கலாம்.
ஆனால், விபத்தின் போது, 92 பேர் ஏற்றி செல்லப்பட்டுள்ளனர். மேலும் படகை இயக்குவதில் அனுபவம் இல்லாதவர் இயக்கி உள்ளார். தகுதியற்ற இந்த படகை தயாரித்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. படகை பயணத்திற்கு பயன்படுத்தும் முன், தொழில்நுட்ப நிபுணர்களிடம் காட்டி ஒப்புதல் சான்றிதழும் பெறவில்லை.
தகுதியில்லாத இந்த படகை பயணத்திற்கு அனுமதி அளித்த கேரள சுற்றுலாத் துறை அதிகாரிகளும், சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகளும் தவறு செய்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications