திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பக்தர்கள் அவதி
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பக்தர்கள் அவதிப்பட்டனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரபலமானது. இங்கு சனிக்கிழமைகளில், பக்தர்களின் வரவு அதிகமாக காணப்படும். இந்நிலையில் சனிக்கிழமையான இன்று காலையில் கோவில் ஊழியர்களுக்கு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
இதில் தகராறு ஏற்பட்டதால், கோவில் ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், கோவில் தரிசனம் மற்றும் அர்ச்சனைக்காக பல இடங்களில் இருந்து வந்த பக்தர்க கடும் சிரமப்பட்டனர்.












Click it and Unblock the Notifications