தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படலாம், அப்பாவிகள் பாதிக்கப்பட கூடாது: பொன்.ராதா கிருஷ்ணன்
மன்னார்குடி: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அப்பாவிகள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்துகள் இல்லை. ஆனால், அதேநேரம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதே பா.ஜ.க.,வின் நிலைப்பாடு.
நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அப்சல் குருவின் மரண தண்டனையை ஆதரித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை பா.ஜ.க. வரவேற்கும். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நிறைவேற்றாமல் உள்ள அப்சல்குருவின் மரண தண்டனையை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அயல்நாட்டில் பதுக்கிவைத்திருக்கும் கருப்புப்பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க., பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாகவே அன்னாஹசாரேவின் போராட்டம் அமைந்துள்ளது.
பிரதமர் நீதித்துறை உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்கும் வகையில் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும். சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததை பா.ஜ.க. வரவேற்கின்றது, என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications