3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய விஜயகாந்த் கோரிக்கை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 3 பேரும் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து விட்டனர்.
எனவே கருணை அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர்கள் மனுவை மறுபரிசீலனை செய்து தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்?:
முன்னதாக தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய்காந்த், நான் சின்ன வயதில் இருந்தே நோன்புக் கஞ்சி குடித்து வருகிறேன். மதுரை பள்ளி வாசலில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி மிகவும் ருசியாக இருக்கும். நோன்பு திறப்பு பற்றி எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. பின்னர் திருக்குரானில் படித்து தெரிந்து கொண்டேன்.
யார் தப்பு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இதுபற்றி குரானிலும், பைபிளிலும், பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது. தப்பு செய்தால் தெய்வம் கண்ணைக் குத்தும், அரசன் அன்றே கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். எந்த தெய்வமும் கண்ணை குத்தாது. பத்மநாபபுரம் கோவில் பாதாள அறையை திறந்தால் தீய அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
எனக்கு தெய்வ பக்தி உண்டு. நான் சாமி கும்பிடுவேன். ஆனால் சிலர், சாமி கிடையாது என்று சொல்லிவிட்டு திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள். நான் அப்படி அல்ல. எனக்கு சாதி, மதம் கிடையாது. என் வீட்டு பூஜை அறையில் எல்லா சாமிகளின் படங்களும் இருக்கும். சாதி, மத பேதங்களை ஏற்படுத்தி மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் கோவிலை குறிக்கும் டெம்பிள் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து, மசூதியை குறிக்கும் மாஸ்க் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து. சர்ச் என்ற வார்தைக்கு 6 எழுத்து. இதேபோல், குரான், பைபிள், கீதா ஆகிய வார்த்தைகளுக்கு 5 எழுத்து. இப்படி மொழிகளும், வார்த்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது மனிதர்களுக்குள் ஒற்றுமை இல்லாமலா போய்விடும்?
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்? எல்லாரும் சகோதரத்துவமாக இருப்போம். ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டைவிட்டு விரட்டுவோம், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ரம்ஜான் நாளில் சபதம் ஏற்போம். இனிமேல் தே.மு.தி.க. அலுவலகத்தில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications