ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு விட்டது- மு.க.ஸ்டாலின்
கடலூர்: ஈழத் தமிழர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவின் கபட நாடகம் வெளிப்பட்டு விட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தீர்மானம் போடத் தெரிந்த அவரால், 3 தமிழர்களின் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கூறி தீர்மானம் போட முடியாதா என்று கேட்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
கடலூரில் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது அவரிடம் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் விவகாரத்தில் தலையிட தனக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதா, இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நடத்தி வரும் கபட நாடகம் இன்று வெளிப்பட்டு விட்டது. 3 பேரையும் தூக்கில் போடக் கூடாது என்று கூறி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தாலே கூட போதும். தீர்மானம் கூட தேவையில்லை. பரிந்துரை செய்தாலே போதும். அதைக் கூட இவரால் செய்ய முடியாதா?.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தீர்மானம் போட்டவருக்கு 3 பேரை தூக்கில் போடக் கூடாது என்று போட முடியாதா என்று கேட்டார் ஸ்டாலின்.
திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்:
முன்னதாக ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நடந்தது. விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிப் பேசுகையில்,
தேர்தல் வந்தால்தான் சில அரசியல் கட்சிகளுக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் ஞாபகம் வரும். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களின் நலனுக்காகப் பாடுபடக் கூடியது திமுக.
தன் எண்ணங்களைச் செயல்படுத்த நபிகள் நாயகம் முனைந்தபோது எத்தனையோ சோதனைகளை சந்தித்தார்.
அதைப்போல திமுகவும் பல்வேறு சோதனைகள் சந்தித்துத்தான் வளர்ந்தது. அதனால் சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். திமுகவின் பல வெற்றிகளுக்கும் பெண்கள்தான் காரணம். தோல்விக்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications