தூக்கு தண்டனை: ஜெயலலிதா பேச்சுக்கு சுப்பிரமணிய சாமி ஆதரவு
மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்த அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரி தான் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜிவ்காந்தி கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையில் யாரும் குறுக்கிடக் கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தக் கூடாது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரி தான்.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15 க்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுத் தாக்கல் செய்வேன் என்று நான் கூறியதால் தான் 12 வருடமாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.
தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன் , பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடும் முடிவில் இதற்கு மேலும் குறுக்கீடு இருக்க கூடாது.
மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்பு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications