தலைமை செயலக வழக்கிலும் நீதிமன்றத்திடம் ஜெயலலிதா கொட்டு வாங்குவார்: ஸ்டாலின்
சேலம்: சமச்சீர் கல்வி விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, தலைமை செயலக வழக்கிலும் நீதிமன்றத்திடம் கொட்டு வாங்குவார் என்று தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களால் வழி நடத்தப்படுவதுதான் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்காக, ஜெயலலிதாவால் நடத்தப்படுகின்ற ஜெயலலிதா அரசாகத்தான் இந்த ஆட்சி உள்ளது.
தேர்தலில் மக்கள் ஏமாந்து ஏதோ மாற்றம் தேவை என்ற உணர்வால் அ.தி.மு.கவுக்கு வாக்களித்தனர். ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.
சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதா நடந்து கொண்ட விதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
2002 வருடம் ஜெயலலிதா முதல்வராக வந்ததும் இப்போது இருக்கும் இந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழையது, பல இடங்களில் ஒழுகுகிறது.. அந்த ஓட்டையை சரிசெய்ய மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. ஏன்... இந்த தலைமைச்செயலகத்தை சுற்றிலும் முளைக்கும் புல், பூண்டுகளை புடுங்குவதற்கு கூட நாம் மத்திய அரசிடமும், பாதுகாப்பு துறையிடமும் அனுமதி வாங்கவேண்டியுள்ளது, எனவே நாமக்கு ஒரு புதிய தலைமை செயலகம் காட்டவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார் அதை தி.மு.கவும் ஆதரித்தது.
முதலில் மகாபலிபுராம் சாலையில் இடம் பார்த்தார், பின்னர் அந்த இடத்தை விட்டுவிட்டு ராணி மேரி கல்லூரியில் அமைக்க வேண்டும் என்று சொன்னார். மக்கள் எதிர்ப்பு கிளம்பியவுடன் அந்த இடத்தையும் விட்டுவிட்டு, கோட்டூர்புரத்தில் இப்போது அறிஞர் அண்ணா நூல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும் என்று சொன்னார். ஆனால், அதில் எதையும் அவர் செய்யவில்லை.
ஜெயலலதா கொண்டு வந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டி முடித்தோம். இப்போது அந்த கட்டிடம் சரியில்லை என்கிறார். நாங்கள் நீதிமன்றத்திற்கு போன பிறகு, அந்த கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவோம் என்கிறார்.
இப்போது அந்த கட்டிடம் தரமானது இல்லை என்று விசாரணை கமிஷன் போட்டுள்ளார்.
ஏற்கனவே மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று என் மீது போடப்பட்ட விசாரனை கமிஷன் என்ன ஆனாது என்று தெரியவில்லை. இப்போது போட்டப்பட்ட விசாரணை கமிஷனும் அப்படித்தான் இருக்கும்.
தலைமை செயலகத்தை எப்படி மருத்துவமனையாக மாற்ற முடியும். அரசு அலுவலகம் இருக்கும் அமைப்பு வேறு மாதிரியானது, நோயாளிகள் போகவும் வரவும் வசதிகள் உள்ளபடி கட்டப்படும் மருத்துவமணை கட்டமைப்பு வேறு மாதிரியானது இதிலும் நாங்கள் நீதிமன்றத்துக்கு போயுள்ளோம்.
சமச்சீர் கல்வியில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைப்போல் தலைமைச் செயலக வழக்கிலும், கடைசியில் நீதிமன்றத்திடம் ஜெயலலிதா கொட்டு வாங்குவார்.
சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது, இந்த இயக்கம் பதவிக்கு வரவேண்டும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படவில்லை. மக்களுக்காக பணியாற்றுவதற்காகத்தான் தொடங்குகிறேன் என்று அண்ணா சொன்னார். அதைத்தான் கருணாநிதி தலைமையில் திமுக தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. தமிழ் நாட்டு மகக்ளின் நலன் தான் முக்கியம். நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபடுவோம்.
இப்போது முன்னாள் அமைச்சர்கள், திமுக முன்னணி தலைவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. இந்த மிரட்டல்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். எதற்கும் தி.மு.கவினர் அஞ்சமாட்டார்கள். கடந்த 5 வருடம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். இப்போது தமிழகம் முழுவதும் சென்று சிறைகளில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். இதைவிட பெருமை வேறு இல்லை. பொய் வழக்குகளை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். பொய் வழக்குகளால் திமுகவை வீழ்த்திட முடியாது என்றார்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கத்திலேயே கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள எல்லா சிறைகளிலும் திரளான திமுகவினர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்க்க கூடிய பெரிய வேலையை ஜெயலலிதா எனக்கு கொடுத்துள்ளார்.
இன்னும் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சிறைகளுக்கும் சென்று திமுகவினரை பார்க்கும் வாய்ப்பையும் அவர் நிச்சயம் தருவார். நான் அதற்குத் தயார்.
திமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த விஷயம் எங்கள் வெற்றியை பாதிக்காது. ஜெயலலிதாவின் இந்த அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைகள், தேர்தலில் திமுகவுக்கு உதவும். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெரிவிப்போம் என்றார்.
தி.மு.க சட்டப் பிரிவு கூட்டம் கூடுகிறது:
இந் நிலையில் நிலமோசடி வழக்குகளில் தி.மு.கவினர் தொடர்ந்து கைது செய்யப்படுவதையடுத்து, வரும் செப்டம்பர் 10ம் தேதி அக்கட்சியின் சட்டப் பிரிவு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இக் கூட்டம் நடக்கவுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications