அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.
இவற்றில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவிகளில் உள்ளனர். கிராம பஞ்சாயத்துகளில் தான் அதிகபட்சமாக 97,458 பேர் பதவிகளில் உள்ளனர்.
இவர்களது 5 ஆண்டு பதவிக் காலம் வரும் அக்டோபர் 24ம் ந்தேதியுடன் முடிகிறது. இதனால் 23ம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளது.
தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 24ம் தேதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்.
தற்போது தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருவதால் தேர்தல் தேதியை அறிவிக்க முடியாது. சட்டசபை கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முடிந்த பிறகு தேர்தல் தேதி வெளியாகும்.
பெரும்பாலும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில், தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நடைபெறலாம்.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து எல்லா கட்சிகளும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன.
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் விரைவில் தொடங்க உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலில் இடம் பெற்றிருந்த கட்சிகள் நீடிக்கின்றன. ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்ட பா.ம.க., புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. ம.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கலாம் என்றே தெரிகிறது. இதனால் நான்கு முனை போட்டி ஏற்படலாம் என்று தெரிகிறது.
ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கக் கூடாது என்ற குரல்களும் வலுவடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் 5 முனை போட்டி ஏற்படலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications