அரியலூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அரியலூர் அருகே கோவிலில் பூட்டை உடைத்து 20 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகில் சிறுவளூரில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் எல்லையம்மனின் 20 சவரன் நகைகளை பீரோவில் வைத்திருந்தனர்.
இரவு கோயில் பூசாரி ராமலிங்கம் கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
காலையில் அந்த வழியே விளையாடிய சிறுவர்கள் கோவிலின் பூட்டு திறந்து கிடப்பது குறித்து, கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் கருப்பையன், அரியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications