தொட்டில் குழந்தை திட்டக் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: அமைச்சர் செல்வி ராமஜெயம்
சென்னை: தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் தொட்டியில் போடப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஜான் ஜேக்கப் பேசியதாவது,
குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி குழந்தையின்மை பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் தொட்டியில் போடப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கூறியதாவது,
தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்கும் வழிமுறைகளை அரசு ஏற்கனவே வகுத்துள்ளது. ஆகையால் குழந்தையில்லாத தம்பதிகள் தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள குழந்தைகளை தாராளமாக தத்தெடுக்கலாம். இந்த விஷயத்தில் அவரது பகுதியில் பிரச்சனை இருக்கின்றது என்று உறுப்பினர் தெரிவித்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணைவை குழந்தைகள் வீட்டுக்கு எடுத்துச் சென்று உண்ண அனுமதி இல்லை. பெண்கள் பயமின்றி நகை அணிந்து கொண்டு வெளியே சென்று வரலாம். அம்மா ஆட்சியில் பெண்கள் பயமின்றி நடமாடும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதியோர், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய காப்பகம் அமைக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications