குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து இ-மெயில் வந்துள்ளது. [email protected] என்ற ஐடியிலிருந்து வந்துள்ள அந்த மெயிலில், இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் எல்லா முக்கிய நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.
(சமீபத்தில் ராஜிவ் கொலை விவகாரத்தில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
இந்த மெயில் வந்துள்ளதை மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (National Investigation Agency) உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் ஹூஜி அமைப்புக்கு தொடர்பு இருந்தது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
26/11 மும்பை தாக்குதலில் கொலாபாவில் உள்ள சபத் ஹவுஸ் மையத்தில் தாக்குதல் நடத்தியது இந்த அமைப்பு தான்.
இந் நிலையில் டெல்லி குண்டுவெடிப்புக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு வங்கதேசம், பாகிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றுள்ள நிலையில் டெல்லியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் ஹூஜி அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications