செக்ஸ் புகார் எதிரொலி: வள்ளியூர் காப்பகத்தை மூட அரசு உத்தரவு
வள்ளியூர்: மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்துவதாக எழுந்த புகார்களை அடுத்து வள்ளியூர் அருகே சின்னம்மாள்புரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ராபின்சன். பாதிரியாரான அவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயல் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். அவர் பல்வேறு மோசடிகள் செய்து வருவதாக இங்கிலாந்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் அவரை கண்காணித்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்த ராபின்சன் குறித்து இங்கிலாந்தில் உள்ள குழந்தைகள் நலபாதுகாப்பு குழுவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அதில் காப்பகத்தில் மாணவர்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், மாணவர்கள் சிலரை போலியான பெயரில் ஆவணங்கள் தயாரித்து இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைத்ததும், ஒரு மாணவனை சட்டப்பூர்வமாக தத்து எடுத்துள்ளதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ராபின்சன் மீது போலீசில் புகார் கொடுக்குமாறு இங்கிலாந்து குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் இங்குள்ள பிரதிநிதி ராக்சுகுரனுக்கு அறிவுறுத்தினர்.
அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ராபின்சன் மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளதும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கியிருந்த போது அவர்களுடனும் ஓரினச் சேர்க்கைக்கு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட சமூக நல அதிகாரி உமாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் காப்பகத்தை ஆய்வு செய்து, அதை மூட உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications