ஊழல்வாதி ரெட்டி கொடுத்த கிரீடத்தை திருப்பிக் கொடுங்கள்: திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்க
பெங்களூர்: சுரங்க ஊழலில் சிக்கி கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி காணிக்கையாக கொடுத்த கிரீடத்தை அவரிடமே திருப்பிக் கொடுக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சுரங்க ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்து ரூ. 3 கோடி பணம், 30 கிலோ தங்கம், ஹெலிகாப்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ஜனார்த்தன ரெட்டி கடந்த 2009-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு வைரக் கற்கள் பதித்த 30 கிலோ எடையுள்ள கிரீடத்தை காணிக்கையாகக் கொடுத்தார். அதன் மதிப்பு ரூ. 45 கோடி ஆகும்.
ஊழல் செய்து பெரும் பணக்காரரான ரெட்டி கொடுத்த கிரீடத்தை அவரிடமே திருப்பிக் கொடுக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரி்ககை விடுத்துள்ளனர். ஆனால் பக்தர்களின் கோரி்க்கை நிறைவேறாது. ஏனென்றால் பெற்ற காணிக்கையை திருப்பிக் கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை.
ரெட்டி கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தபோது கோவில் டிரஸ்ட் சேர்மனாக இருந்த ஆதிகேஷவலு நாயுடு கூறியதாவது,
கிரிமினல்கள் கூட காணிக்கை அளிக்க அனுமதிக்கும் கோவில்களில் திருப்பதியும் ஒன்று. பக்தர்களின் நோக்கம் எங்களுக்கு புரிகிறது. ஆனால் கிரீடத்தை திருப்பிக் கொடுக்க முடியாது. அந்த காணிக்கை சட்டப்படி தான் கொடுக்கப்பட்டது. அவர் அதற்கான ஆவணங்களை அப்போது சமர்பித்தார் என்றார்.












Click it and Unblock the Notifications