பொருளாதார வீ்ழ்ச்சிக்கு பின்னும் இந்திய மாணவர் வருகை குறையவில்லை: அமெரிக்க தூதர் ஜெனீபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, அமெரிக்காவின் நிதிநிலை தள்ளாடிய போதும், அமெரிக்காவில் படிக்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என, அமெரிக்க துணைத் தூதர் ஜெனிபர் மிக்கின்டயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெனீபர் மிக்கின்டயர் கூறியதாவது,

உலகளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது, அமெரிக்கா பொருளாதாரத்திலும் கடும் பாதிப்படைந்தது. ஆனால், அமெரிக்காவில் வந்து படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சிக்கு முன் 83 ஆயிரம் பேர் என இருந்தது, தற்போது, 1 லட்சம் மாணவர்கள் என உயர்ந்துள்ளது. இதுமேலும் அதிகரிக்க விரும்புகிறேன்.

ஹிலாரி கிளிண்டன் தற்போது துவக்கி வைத்துள்ள புதிய திட்டத்தின் மூலம், இந்தியாவிற்கு வந்து படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உலக நாடுகளை சேர்ந்தவர்களில், அமெரிக்காவிற்கு விசா கேட்டு விண்ணப்பவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள்.

இதில் வியாபாரம் மற்றும் பணிக்கான விசா பெற்றவர்கள் 65 சதவீதம். தற்போது இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை 22 சதவீரம் அதிகரித்துள்ளது. தென் இந்தியாவில் எய்ட்ஸ், காசநோய், நீரிழிவு நோய்கள் கட்டுபடுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

தென்னிந்தியாவில் தமிழகம் அதில் முன்னோடியாக உள்ளது. ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் அகிம்சா போராட்டத்திற்கு நாடெங்கும் இருந்து கிடைத்த ஆதரவை பத்திரிக்கைகள் மூலம் அறிந்து கொண்டேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+