தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைகின்றன: இந்திய தொழில் கூட்டமைப்பு
மதுரை: தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வது குறைந்து கொண்டே செல்வதாக, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்ட தலைவர் அசோக் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்து கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் அசோக் கூறியதாவது, இந்தியாவில் தொழில் முதலீடு .8 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 20 பில்லியன் டாலர் அளவு மட்டுமே முதலீடு உள்ளது.
இது மிகவும் குறைவு. முதலீடு குறைவதற்கு, திறமையான பணியாளர்களின் பற்றாகுறையே முக்கிய காரணம். இ-கவர்னன்ஸ் முறையை கொண்டு வந்ததால், அரசு நிர்வாகம் மேலும் எளிமைப்படுத்த முடியும்.
மருத்துவ சுற்றுலா, ஆட்டோமொபைல்ஸ், ஏரோநாட்டிக்கல்ஸ், சூரியொளி ஆற்றல் ஆகியவற்றில் கிளஸ்டர் அமைத்தால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கான முயற்சிகளில் சி.ஐ.ஐ., ஈடுபட்டு வருகிறது.
தொழில் வளர்ச்சிக்காக, அடுத்தாண்டு ஜனவரி மாதம் மதுரை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையான பணியாளர்களை ஏற்படுத்த, 15 ஆயிரம் தாழ்த்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக தமிழக அரசு, நபார்டு வங்கியுடன் இணைந்து மையம் உருவாக்க முடிவு செய்துள்ளது, என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications