தூக்கு தண்டனை- ஒரே மேடையில் விவாதிக்க கருணாநிதிக்கு ஈ.வி.கே.எஸ் சவால்!
ஈரோடு: தூக்கு தண்டனை கூடாது என்று கூறிய காங்கிரஸ் எம்பி மணிசங்கர் அய்யர் தமிழகத்துக்குள் நுழைய முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் 19 தமிழர்களை குண்டு வைத்து கொன்ற தீவிரவாதிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். இது மிகவும் அபாயகரமான கருத்து.
ஒரு மூத்த அரசியல் தலைவர் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவது போன்று அவரது கருத்து அமைந்துள்ளது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நியாயம் இருப்பதாக கருதினால் கருணாநிதியுடன் ஒரே மேடையில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?.
காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யரும் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லி இருக்கிறார். சோனியா தயவால் எம்.பியாக இருக்கும் அவர் இந்தக் கருத்தை சொன்னது அபத்தமானது. அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மணிசங்கர் அய்யர் தமிழகத்துக்குள் நுழைய முடியாது. காங்கிரசார் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும், இளைஞர் காங்கிரசாரும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும் சொல்கிறார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட மேலிடத்தில் வற்புறுத்துவேன்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது என்று காலை 9 மணிக்கு எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் ஈரோட்டில் இருப்பதால் கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை. நாளை கூட்டம் தொடர்ந்தால் தனித்து போட்டி என்ற கருத்தை கமிட்டியில் எடுத்து கூறுவேன்.
நில அபகரிப்பு வழக்குகளில் 90 சதவீதம் உண்மையான வழக்குகள் என்றே நினைக்கிறேன். ஒன்றிரண்டு வழக்குகளில் தவறு நடந்தால் அதை சரி செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி நல்லபடி நடக்கிறது. ஆனால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் மக்களின் ஆதரவு குறைந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications