தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் ஆண்டு தோறும் செப்டம்பர் 11 ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரமக்குடிக்கு வந்து இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன் முதலில் அஞ்சலி செலுத்தியது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்தாண்டு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அடுத்தாண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அரசே விழா எடுக்க வேண்டும், என்றார்.
அவருடன் மாநில தலைவர் கோ.க.மணி, பொது செயலாளர் வடிவேல் ராவணன், கொள்கை விளக்க செயலாளர் விளனரசு, மாநில துணை பொது செயலாளர் தளபதி ராஜ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ், பரமக்குடி நகர் செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications