தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரான்சில் போராட்டம்: நாளை செங்கொடிக்கு அஞ்சலி
பாரீஸ்: கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரான்சில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நேற்று பிரான்சில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
பாரிசில் உள்ள மனித உரிமைச் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரியும், தமிழகம் எங்கும் நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பிரென்சு மொழியில் தொடர் முழக்கங்கங்கள் எழுப்பப்பட்டது. இதனை மக்கள் பிரதிநிதி சிவசுப்பிரமணியம் மகிந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார்.
3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை விவகாரம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் அறிக்கையை உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் வெளியிட்டதோடு, உலகமெங்கும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இத்தகைய கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புலம்பெயர் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், பிரான்சில் உள்ள இந்திய தூதரகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் சிவகுருநாதன் சுதர்சன் தெரிவித்தார்.
3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் நோக்கிலான தொடர் செயற்பாடுகளை, உரிய வழிமுறைகளை பிரான்சில் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழகத்தில் தீயினில் காவியமாகிய செல்வி. செங்கொடிக்கு வணக்கம் செலுத்தும் அஞ்சலி நிகழ்ச்சி நாளை (13-ம் தேதி) மாலை 5 மணிக்கு லாசப்பல் பகுதியில் நடக்கவிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications