ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ விசாரணை!

அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு நிர்பந்தத்தின் பேரில் விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்குவது வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த 'அஸ்ட்ரோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப் மார்ஷலிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது, அதற்குக் கைமாறாக மாறன் குடும்பத்தினருக்குச் சொந்தமான சன் டி.வி.யில் முதலீடு செய்தது உள்ளிட்டவை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மார்ஷல் விளக்கமளித்தாகத் தெரிகிறது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு 'அனுமதிக் கடிதம்' வழங்குவது வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.
மேக்சிஸ் குழுமத்துக்கு ஏர்செல் நிறுவன பங்குகள் விற்கப்பட்ட பிறகு, அந்த குழுமத்தைச் சேர்ந்த அஸ்ட்ரோ நிறுவனம் சன் டி.வி.யில் முதலீடு செய்ததாகவும் சிபிஐ கூறியிருந்தது.
அமைச்சரின் உத்தரவின் பேரிலேயே ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் சிவசங்கரன் சமர்ப்பித்த ஆவணங்களின் மீது முடிவெடுப்பது தாமதிக்கப்பட்டதாக தயாநிதி மாறனின் உதவியாளர்கள் சிபிஐயிடம் தெரிவித்திருப்பதாகவும் சிபிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.
2005-06ல் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ரால்ஃப் மார்ஷல் பலமுறை அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் தெரியவந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்மிடம் இருந்த பங்குகளை மேக்சிஸ் குழுமத்துக்கு விற்க வேண்டும் என்று நிர்பந்திப்பதற்காகவே, தொலைத் தொடர்பு உரிமங்கள் கோரி தாம் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக சிவசங்கரன் குற்றம்சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.
மேக்சிஸ் குழுமத்துக்கு பங்குகள் விற்கப்பட்டபிறகு ஏர்செல் நிறுவனத்துக்குச் சொந்தமான டிஷ்நெட் வயர்லெஸ் நிறுவனத்துக்கு 14 தொலைத் தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சன் குழுமம் சார்பில் மேக்ஸிஸ் நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மேக்ஸிஸ் மூலம் ஏர்செல்லை சன் குழுமம் கட்டுப்படுத்தியதாகவும் புகார்கள் உள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தயாநிதி மாறன் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications