விருதுநகரில் பஸ் நிலையத்தில் நின்ற பஸ்சுக்கு தீ வைப்பு
விருதுநகர்: விருதுநகர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு, தீவைத்த மர்மக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில், நேற்று மதியம் 1.45 மணிக்கு மல்லையநாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்சை டிரைவர் திருசெல்வம் அங்கு நிறுத்திவிட்டு, விசாரணை அலுவலகத்திற்குள் சென்றிருந்தார்.
இந்நிலையில், பஸ்சிற்குள் இருந்து புகை வருவதாக சில பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பஸ் நின்ற இடத்திற்கு டிரைவர் திருசெல்வம் சென்று பார்த்த போது, பஸ்சிற்குள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து, திருசெல்வம் பஸ் நிலையத்தில் இருந்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். பஸ் நிலைய ஊழியர்கள் சேர்ந்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்கு தீ வேகமாக பஸ்சின் இருக்கைகளுக்கு பரவி, கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
இதையடுத்து விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தீயை அணைத்தனர். விருதுநகர் போலீசாரும் வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இதில், 1.45 மணிக்கு சங்கரலிங்கபுரத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு பஸ் வந்துபோது, பயணித்தவர்களில் யாரோ ஒருவர் தான் தீ வைத்துள்ளதாக தெரிந்தது. இது குறித்து மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் நின்ற பஸ் தீப்பிடித்த எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications