நக்சலைட் வேட்டையில் ஈடுபடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணிக்கு அழைக்கும் சிஆர்பிஎப்

நாட்டில் அதிக இடங்களில், நக்சலைட்டுகளின் தொல்லை உள்ளது. இவர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் பணியில் பெரும்பாலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தேவை கிட்டத்தட்ட பல மாநிலங்களிலும் தேவையாக உள்ளது. இந்நிலையில், நக்சலைட் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 70,000 வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்காக, 2,012 ஓய்வுப் பெற்ற ராணுவ பணியாளர்களை தங்களது படையில் இணைந்து செயல்படுமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படை அழைப்பு விடுத்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 71 ஆண்டு கால வரலாற்றில், முன்னாள் ராணுவத்தினரை பணியில் சேர்ப்பது இதுவே முதல் முறையாகும்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெ.சி.ஓ. அதிகாரிகள், என்.சி.ஓ.அதிகாரிகள் மற்றும் பலர் இடம் பெறவுள்ளனர். இந்த அழைப்பை ஏற்று சிஆர்பிஎப்பில் இணையும் முன்னாள் ராணுவத்தினருக்கு, மாதம் ரூ. 32,000 முதல் 55,000 வரை சம்பளம் அளிக்கப்படும். இந்த ஊதியம் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு அளிப்பதை விட அதிகமாகும்.
மேலும், அவர்களுக்கு நக்சலைட்டுகளை எதிர்க்கும் முறைகள் மற்றும் வெடிப் பொருட்களை செயலழிக்க செய்யும் முறைகள் குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். 348 ஜெ.சி.ஓ.களையும், 1,754 என்.சி.ஓ.களையும் 3 ஆண்டு கால ஒப்பந்தத்தில் பணியில் சேர்க்க சிஆர்பிஎப் திட்டமிட்டுள்ளது.
ஆட்கள் அதிகம் தேவைப்படும் பட்சத்தில், நியமிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் சி.ஆர்.பி.எப். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 6 மாதங்களில் ஓய்வுப் பெற்ற ராணுவத்தினர், மீ்ண்டும் நாட்டு பணியில் தங்களை இணைத்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications