அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம்- நரேந்திர மோடி அறிவிப்பு

குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த நாளே இந்தப் போராட்டத்தை மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி என்று அந்தக் கட்சி வர்ணித்துள்ளது. இந்த நிலையில் மத நல்லிணக்கம், அமைதிக்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மோடி அறிவித்துள்ளார். மேலும் அவரை தேசிய அளவில் களம் இறக்க பாஜக தயாராகும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதம்:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். 2002 கலவரத்திற்குப் பின்னர் குஜராத் அரசு மீதான அபாண்டமான புகார்கள், பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு இதன் மூலம் ஒரு முடிவு வந்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக என்னையும், எனது அரசையும், எனது மாநிலத்தையும் அவமானப்படுத்தி பேசுவது ஒரு சிலருக்கு பேஷனாகவே இருந்து வந்தது. ஆனால், பொய்களையும், கட்டுக்கதைகளையும், அவதூறுகளையும் பரப்பி வந்தவர்கள் இன்று பாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
2002க்குப் பிறகு அமைதி, மத நல்லிணக்கம், வளர்ச்சி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது குஜராத். பொய்கள், அவதூறுகள், சதித் திட்டங்கள், குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் இதை சாதித்துள்ளது குஜராத்.
சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் மேலும் வலுவாக்கும் வகையில், சத்பவன இலக்கு என்ற இயக்கத்தை நான் தொடங்குகிறேன்.
இதன் ஒரு பகுதியாக நான் 17ம் தேதி சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இது 19ம் தேதி முடிவடையும். இந்த உண்ணாவிரதத்தின் மூலம் குஜராத்தில் நிலவி வரும் அமைதி, மத நல்லிணக்கும், ஒற்றுமை ஆகியவை மேலும் வலுவடையும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் மோடி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications