பரமக்குடி வன்முறை சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மீதுதான் தவறு-டாக்டர் ராமதாஸ்
சென்னை: பரமக்குடி வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் மீதுதான் தவறு உள்ளது. எனவே தவறு செய்தவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பரமக்குடி அருகே தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை காவல்துறையினர் அலட்சியமாக கையாண்டுள்ளனர். அப்போதே கொலையாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் தலித் சமுதாய மக்கள் கொதிப்படைந்திருக்க மாட்டார்கள்.
மேலும், ஜான் பாண்டியனை தேவையில்லாமல் அவசரம் அவசரமாக கைது செய்தது தவறு. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் கைது செய்து விட்டு, பின்னர் வன்முறை மூண்டபோது, தற்காப்புக்காக சுட்டோம் என்று கூறுவது தவறானது.
எனவே துப்பாக்கிச் சூடு நடத்தஉத்தரவிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
விலங்குகளால் கொல்லப்படும் நபர்களுக்கே இழப்பீடாக 3 லட்ச ரூபாய் தரும்போது, இந்தக் கலவரத்தில் போலீஸாரால் கொல்லப்பட்ட நபர்களுக்கு வெறும் 1 லட்ச ரூபாய் இழப்பீடு என்பது மிகவும் தவறு. அவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications