திமுகவுடன் விரிசலோ, மனக்கசப்போ இல்லை: திருமாவளவன்
சென்னை: திமுகவுடன் எந்தவித விரிசலோ, மனக்கசபப்போ இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
திமுகவுடன் எந்த விரிசலும் இல்லை, மனக்கசப்பும் இல்லை. இன்னும் திமுக கூட்டணியில் தான் உள்ளோம்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினர். எங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மாநில செயற்குழுவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும். திருச்சி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது.
நாங்கள், பாமகவுடன் சேர்ந்து திருச்சியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இடைத்தேர்தல் காரணமாக அதை தள்ளிவைத்துள்ளோம்.
பாமக கூட்டணி குறித்து முடிவு செய்ய வரும் 17-ம் தேதி நடப்பதாக இருந்த மாநில செயற்குழு கூட்டம் தள்ளி வைக்கப்படுகிறது என்றார்.
அப்போது வன்னியரசு, பாவலன், சங்கத்தமிழன், சேகுவேரா, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் அவருடன் இருந்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications