10 பேரை பலி கொண்ட அரக்கோணம் ரயில் விபத்து-மனிதத் தவறு காரணமா?

Subscribe to Oneindia Tamil

Arakkonam Train Accident
அரக்கோணம்: அரக்கோணம் அருகே நேற்று இரவு நடந்த ரயில் விபத்துக்கு, மேல்மருவத்தூர் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்துக்கு மனிதத் தவறே காரணம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த மேல்மருவத்தூர்-வேலூர் விரைவு பாசஞ்சர் ரயில் மோதியது.

நேற்று இரவு 9.45 மணியளவில் நடந்த இந்தக் கோர விபத்தில் 10 பேர் பலியானார்கள்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்துக் கூறப்படுவதாவது:

அரக்கோணத்திலிருந்து காட்பாடி செல்லும் பாசஞ்சர் ரயில் சிக்னலுக்காக சித்தேரி ரயில் நிலையத்துக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தது. அப்போது மேல்மருவத்தூரிலிருந்து சென்னை சென்டிரல் வழியாக வேலூர் செல்லும் விரைவு பாசஞ்சர் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

தனக்கு முன்பு நின்று கொண்டிருந்த காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது அது வேகமாக மோதியது. இதில் காட்பாடி ரயிலின் 5 பெட்டிகளும், மருவத்தூர் ரயிலின் 3 பெட்டிகளும் தடம் புரண்டு விழுந்தன. இதில் இருந்த பயணிகள் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டனர்.

அந்த இடத்தில் கடும் இருட்டும், மழை வேறு பெய்து வந்ததாலும் மீட்புப் பணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தன. ரயில்வே மீட்புக்குழுக்கள், தீயணைப்புப் படையினர், ரயில்வே போலீஸார், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் முதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவித்தன. தற்போது 10 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் சீரியஸான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏன் விபத்து?

வழக்கமாக வர வேண்டிய நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக மேல்மருவத்தூர் ரயில் வந்து கொண்டிருந்தது. இதுவே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் ஒரு ரயில் சிக்னலுக்காக காத்திருப்பது பின்னால் வந்த ரயிலின் என்ஜின் டிரைவருக்குத் தெரிவிக்கப்படாதது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சிக்னல் கிடைக்காமல் எப்படி மேல்மருவத்தூர் ரயிலின் என்ஜின் டிரைவர் ரயில் நிலையத்துக்குள் நுழைந்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே இந்த விபத்துக்கு மனிதத் தவறே காரணமாக இருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+