நெல்லையில் சசண்டையை விலக்கச் சென்ற லாரி டிரைவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது
வள்ளியூர்: நெல்லையில் சண்டை போட்டவர்களை விலக்கிவிடச் சென்ற லாரி டிரைவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
நெல்லை தச்சநல்லூரைச் சேர்நதவர் கோமதிநாயகம். அவர் பணகுடி ரோஸ்மியாபுரத்தில் தங்கி இருந்து ரமேஷ் என்பவரிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை லாரியில் லோடு ஏற்றுவதற்காக கோமதிநாயகம் ரோஸ்மியாபுரம் மெயின்ரோட்டில் லாரியுடன் காத்திருந்தார். அப்போது லாரி உரி்மையாளர் ரமேஷுக்கும், அவரது சகோதரி கலையரசிக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கலையரசிக்கு ஆதரவாக அவரது கணவர் ஜெயபாண்டி, மகன் பிரதாப் சிங் ஆகியோர் சென்று ரமேஷை சரமாரியாக அடித்து உதைத்தார்கள்.
இதனால் பதறிப்போன டிரைவர் கோமதிநாயகம் சண்டை போடாதீங்க, பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சண்டையை விலக்கிவிட்டார். அப்போது எதிர் தரப்பினர் சமரசம் செய்த கோமதிநாயகத்தின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்தனர். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த அவரை உடனடியாக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோமதிநாயகம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரமேஷ் பணகுடி போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி ஜெயபாண்டி, பிரதாப் சிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications