சிறுவன் கண்ணில் விழுந்த ஆணித்துண்டு... பார்வை பறிபோகாமல் காத்த மருத்துவர்கள்!
சென்னை: விளையாடிய போது சிறுவனின் கண்ணில் பாய்ந்த ஆணியை பார்வை பறிபோகாமல் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய சென்னை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கண்ணில் வீக்கத்தோடு வந்த யூனிஸ் என்ற சிறுவனை டாக்டர் பரிசோதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, அவனது கண்ணில் 2 செ.மீ. நீளத்தில் ஆணி துண்டு குத்தி இருப்பது தெரிந்தது.
ராயபுரம் கல்மண்டபம் பகுதியை சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரது மகன் யூனிஸ்(14). கடந்த 10 நாட்களுக்கு முன் அருகில் உள்ள திடலில் விளையாடிய போது கண்ணில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொண்ட போதிலும் யூனிஸ்சின் கண்ணின் வீக்கம் குறையவில்லை.
இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது தெரிந்து. கண்ணில் கண்டறியப்பட்ட ஆணி துண்டை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர் மிக சாதுர்யமாக நீக்கினர். இதனால் சிறுவனின் பார்வை போகாமல் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறியதாவது, கண்களின் நரம்புகள் மிகவும் துல்லியமானவை. சிறிய குறைபாடு வந்தாலும் பார்வை போய்விடும். கண்ணில் ஆணித் துண்டு பதிந்திருப்பது குறித்து, முதலில் யாருக்கும் தெரிவிக்கவில்லை.
சிகிச்சை முடிந்த பின்னரே தெரிவித்தோம். கண்ணில் 10 நாட்களுக்கு மேலாக ஆணித் துண்டு இருந்தும் பார்வையில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தது சிறுவனின் அதிஷ்டம் தான், என்றனர்.












Click it and Unblock the Notifications