ராசா, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் பதிவு- நீதிமன்றம் இன்று முடிவு

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த வழக்கை நீதிபதி ஓ.பி.சைனி தினந்தோறும் விசாரித்து வந்தார்,
இறுதியாக நடந்த விசாரணையின்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் ஏதோ ஒரு வகையில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டு நாட்டுக்கு ரூ. 30,984 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன. இனால் இவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரின் வழக்கறிஞர்களும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்ட யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், இதனால் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என்றும் வாதாடினர்.
ராசாவின் வழக்கறிஞர் வாதாடுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், இப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலும் நாடாளுமன்றத்திலேயே கூறிவிட்டனர். இதனால் இந்த வழக்கு சட்டரீதியில் நிற்காது, நிச்சயம் தோற்கும்.
இந்த விவகாரத்தில் பிரதமரையே நேரில் அழைத்து சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றார். (இதே கோரிக்கையை ராசாவே நேரடியாக நீதிமன்றத்தில் முன் வைத்ததும் குறிப்பிடத்தக்கது)
அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில், இப்போது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான தனது முடிவை நீதிபதி இன்று அறிவிப்பார் என்று தெரிகிறது.
2ஜி ஊழலில் கனிமொழிக்கு தொடர்பில்லை-கருணாநிதி:
இந் நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 2ஜி ஊழலில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கலைஞர் டிவியில் கனிமொழி ஒரு பங்குதாரர் மட்டுமே. பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் பங்குதாரர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யும் நடைமுறை கிடையாது.
கனிமொழியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இதைத் தெரிவித்தும் வழக்கு தொடர்ந்து நடக்கிறது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications