பாகிஸ்தானில் அல் கொய்தா முக்கிய தலைவரைக் கொன்ற அமெரிக்கப் படை
வாஷிங்டன்: பாகிஸ்தானில் அல் கொய்தாவின் தீவிரவாத நாடவடிக்கைகளை மேற்கொள்ளும் தலைவர் அபு ஹப்ஸ் அல் ஷஹ்ரி என்பவர் அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் உயிர் இழந்தார் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது அல் கொய்தாவுக்கு விழுந்த இன்னொரு மரண அடி.
பாகிஸ்தானில் அல் கொய்தாவின் தீவிரவாத நாடவடிக்கைகளை மேற்கொள்ளும் தலைவர் அபு ஹப்ஸ் அல் ஷஹ்ரி. அவர் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிர் இழந்தார். கடந்த மாதம் தான் அல் கொய்தாவில் நம்பர் 2-க இருந்த அதியா அப்த் அல் ரஹ்மானை அமெரிக்கப் படைகள் கொன்றன. இந்த மாதம் ஷஹ்ரி கொல்லப்பட்டதன் மூலம் அல் கொய்தாவுக்கு அடி மேல் அடி விழுந்துள்ளது.
கடந்த மே மாதம் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படி அடுத்தடுத்து தலைவர்கள் கொல்லப்படுவதால் அல் கொய்தாவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,
பாகிஸ்தான் நடவடிக்கைளுக்கான அல் கொய்தா தலைவர் அபு ஹப்ஸ் அல் ஷஹ்ரி கடந்த வாரம் வஜிரிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டார். அபு ஹப்ஸின் மரணம் அல் கொய்தாவுக்கு பேரிழப்பு.
அவர் தெஹ்ரிக் - இ- தாலிபான் அமைப்பினருடன் சேர்ந்து கூட்டாக தாக்குதல்கள் நடத்தி வந்தார். தற்போது அவர்து மரணத்தால் பாகிஸ்தானில் இருந்த பெரும் அச்சுறுத்தல் விலகியுள்ளது என்றார்.
கடந்த வாரம் வஜிரிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த தாக்குதலில் தான் அபு ஹப்ஸ் இறந்தாரா என்பது தெரியிவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆளில்லா விமானம் சட்டம் ஒழுங்கில்லாத பழங்குடியினர் மாவட்டமான வடக்கு வஜிரிஸ்தானின் ஹிசேகெல் கிராமத்தில் இரண்டு குண்டுகள் போட்டன. அவை ஒரு வாகனம் மற்றும் வீட்டைச் சேதப்படுத்தியது.
இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்கா உறுதிப்படுத்தாவிட்டாலும், அதன் இராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள சிஐஏ தான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்துகின்றன.
வடக்கு வஜிரிஸ்தான் தான் ஹக்கானி அமைப்பின் தலைமையகமாக உள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் முதல் எதிரியே இந்த ஹக்கானி அமைப்பு தான்.
இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் நடத்தியுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கிழக்கு மாகாணமான கோஸ்டில் அந்த அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 சிஐஏ அதிகாரிகள் இறந்தனர்.
அமெரிக்கப் படைகள் பின் லேடன் கொல்லப்பட்டதில் இருந்து பாகிஸ்தானில் சுமார் 24 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications