எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ.180 கோடி வாங்கி கலைஞர் டி.விக்கு தந்த பல்வா- சிபிஐ

டிபி ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வரும் பல்வாவின், துணை நிறுவனமான சினியுக், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கியது. இதை கடனாக வாங்கியதாகவும் வட்டியோடு சேர்த்து ரூ. 214 கோடியைத் திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறுகிறது.
ஆனால், இது தனது நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக பல்வா தந்த லஞ்சம் என்கிறது சிபிஐ. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெடிக்க ஆரம்பித்தவுடன், கலைஞர் டிவி மிக விவரமாக இந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்து கடன் போல காட்டியது என்பது சிபிஐயின் வாதம்.
இந் நிலையில் பல்வா எங்கிருந்து இந்த ரூ. 200 கோடியை திரட்டினார் என்பது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன. டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமான திட்டப் பணிகளுக்காக எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ. 180 கோடியை கடனாக வாங்கியுள்ளார் பல்வா.
ஆனால், அந்தப் பணத்தை கட்டுமானத் திட்டத்துக்குப் பயன்படுத்தாமல் அப்படியே கலைஞர் டிவிக்கு தந்துள்ளார் என்று சிபிஐயின் Bank security and frauds cell (BS&FC) பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இந்த விவகாரத்தில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.எஸ்.விஜயனுக்கும் பங்குள்ளதா என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
நமக்கெல்லாம் ரூ. 20 லட்சம் வீட்டு லோன் தரவே, நமது தாத்தாவின் சொத்து பத்திரத்தில் ஆரம்பித்து, நமது பேரக்குழந்தையின் போட்டோ வரை கேட்கும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பல்வா மாதிரியான ஆட்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுமானத் திட்டப் பணிகளுக்காக எல்ஐசியின் இந்த துணை நிறுவனம் கடன் தருவதில் ஏராளமான முறைகேடுகளும் லஞ்சம் கைமாறுவதாகவும் பொதுவான புகார்கள் உள்ளன. இந் நிலையில் இப்போது பல்வா-கலைஞர் டிவி விவகாரத்தை வைத்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கு தரப்பட்ட நிதியை பல்வா முறையாகப் பயன்படுத்துகிறாரா என்பதை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் கண்காணித்திருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அது நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அவர் திருப்பிவிட்டதை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications