பெட்ரோல் விலை ரூ.3.14 உயர்ந்தது-தமிழகத்தில் விலை லிட்டர் ரூ.71.64

பெங்களூரில் தான் நாட்டிலேயே மிக அதிகபட்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 74.44 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரில் பெட்ரோல் மீது சாலை மேம்பாட்டுக்கான வரியும் விதிக்கப்படுவதால் பிற மாநிலங்களைவிட எப்போதுமே அங்கு விலை அதிகம்.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த 4 மாதங்களில் இது இரண்டாவது விலை உயர்வாகும்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய நிலை உருவானதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இப்போது பெட்ரோல் விற்கப்படும் விலையால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.2.61 இழப்பு ஏற்படுவதாகவும், தினந்தோறும் ரூ.15 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டது. இதனால் விலையை நிறுவனங்கள் நினைத்தபோதெல்லாம் உயர்த்தி வருகின்றன.
கடந்த மே மாதம்தான் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3ம், சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.50ம், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டது.
இந் நிலையில் பணவீக்க விகிதமும் உயர்ந்து வருகிறது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவதால், சர்வதேச அளவில் பெட்ரோலியத்தை கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் தொகையும் அதிகரித்து வருகிறது.
இதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் இன்று மும்பையில் கூடி விவாதித்தனர். அதில் விலையை லிட்டருக்கு ரூ. 3.14 வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications