பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்: விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகிறது.
டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கான விலையை மத்திய அரசு 24-6-2011 முதல் உயர்த்தியது. இதன் விளைவாக, விலைவாசி உயர்வும், அதைத்தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பும் ஏற்பட்டது.
தற்போது, பெட்ரோல் விலையை 15-ம் தேதி நள்ளிரவு முதல் 2 ரூபாய் 61 காசுகள் என்ற அளவில் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீருந்துகள் ஆகியவைகளைப் பயன்படுத்தும் சாதாரண மக்களை வெகுவாக பாதிக்கும்.
மேலும் அவர்களின் வாங்கும் சக்தியைக் குறைப்பதுடன், அவர்களுக்கு பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். விலைவாசி ஏறி வரும் இந்த நேரத்தில், விலைவாசியைக் குறைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.
15-ம் தேதி முதல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு நான் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications