12வது முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியது ரிசர்வ் வங்கி- வங்கிக் கடன்கள் காஸ்ட்லியாகும்!
மும்பை: நாட்டின் பொதுப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடாமல் தவிர்க்க முக்கிய வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ரெபொ மற்றும் ரிவர்ஸ் ரெபோ விகிதங்களை 25 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன் பொதுப் பணவீக்க விவரம் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி 9.78 ஆக பணவீக்கம் உயர்ந்தது. இந்த மாதம் நிச்சயம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிடும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, பணவீக்க நடவடிக்கையை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து மேற்கொள்ளும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.
அதன்படி முதல் நடவடிக்கையாக முக்கிய வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. ரெபோ எனப்படும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான வட்டியை 25 புள்ளிகளும், ரிவர்ஸ் ரெபோ எனப்படும் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய முதலீட்டுக்கான வட்டியையும் 25 புள்ளிகளும் உயர்த்தியுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துவது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இது 12 வது முறையாகும்.
இதன் மூலம் பல்வேறு வகை கடன்களுக்கான வட்டிகளை உடனடியாக உயர்த்த ஆரம்பித்துள்ளன வணிக வங்கிகள்.
-
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரூ.1000-க்கு மளிகை சாமான்கள் வாங்கிய காலம்! 2000 vs 2026: மலைக்க வைக்கும் பால், சிலிண்டர் விலை உயர்வு -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications