மானிய விலையில் இனி வருடத்துக்கு 4 சமையல் கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே!

இது குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எரிபொருட்களுக்கான அமைச்சர்கள் குழு இன்று ஆலோசித்து முடிவெடுக்க உள்ளது.
இப்போது வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படும் 14.5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை ரூ. 395 முதல் ரூ. 415 வரை உள்ளது. மாநில வரிகளுக்கு இணங்க இதன் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஆனால், இந்த சிலிண்டரின் உண்மையான விலை ரூ. 666 ஆகும்.
கிட்டத்தட்ட ரூ. 250 வரை மத்திய அரசு மானியமாக அளிப்பதால் தான் இதன் விலை ரூ. 415க்குள் உள்ளது. இதனால் ஒரு சிலிண்டரை விற்றால் மத்திய அரசுக்கு ரூ. 250 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசுக்கு ரூ. 12,629 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட சிலிண்டருக்குத் தரப்படும் மானியத்தைக் குறைப்பது குறித்தும், ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 4 முதல் 6 சிலிண்டர்களை மட்டுமே மானிய விலையில் வழங்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இரு சக்கர வாகனம், கார், சொந்த வீடு உள்ளவர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு மட்டும் இந்த நிபந்தனையை அமல்படுத்துவது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து இன்று முடிவெடுக்கப்படவுள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், ஒரு சிலிண்டரை குறைந்தபட்சம் ரூ.666 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications