யாருடனும் கூட்டணி இல்லை... மதிமுக தனித்துப் போட்டி! - வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. களம் இறங்கும் யாருடனும் கூட்டணி சேரமாட்டோம். தனித்துப் போட்டியிடுவோம். மதிமுகவை மாற்று அரசியலுக்கான சக்தி என மக்கள் நம்புகிறார்கள். இந்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம்," என்றார்.
நெல்லை மாநாடு
மேலும் பேசுகையில், "நெல்லையில் நடந்த ம.தி.மு.க. மாநாடு 18 ஆண்டு வரலாற்றில் பெரிய உந்துலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஊழலற்ற நிர்வாகத்தை தரவேண்டும்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு கயிறு அறுக்க ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூவர் உயரும் காப்பாற்றப்படும் என மதிமுக நம்புகிறது.
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானதற்கு காரணமான போலீசாரை பணிநீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை அறிக்கை முறையாக இருக்குமா? என்று தெரியவில்லை.
இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை. படுக்கை வசதி, வழங்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும். அது பேரழிவை ஏற்படுத்தும். சுனாமி அலைகள் தாக்கும்போது தென் மாவட்டத்திற்கு பெரும் சேதம் ஏற்படும்.
இடிந்தகரையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது. மத்திய-மாநில அரசுகள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அமைச்சர் ஜார்ஜ் முயற்சி செய்கிறார். இது நமது மக்களின் ஜீவாதாரப் பிரச்சினை. மாநில அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது," என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications