காலாண்டு தேர்வுக்கு பாடங்கள் குறைப்பு: பள்ளிக் கல்வித்துறை
நெல்லை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமத்தால் காலாண்டுத் தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என திமுக அரசு அறிவித்தது. ஆனால் புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு சமச்சீர் கல்வியை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நடப்பு கல்வியாண்டிலேயே 1 முதல் 10-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தான் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
அதிலும் சில தனியார் பள்ளிகளுக்கு இன்னும் போதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை.
சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டதால் பள்ளி நாட்களை ஈடுகட்ட ஒரு மாதத்திற்கு இரண்டு சனிக்கிழமை வேலை நாள் எனவும், தினமும் 35 நிமிடங்கள் பள்ளி நேரத்தை அதிகரித்தும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் காலாண்டு தேர்வுக்கான பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
7 முதல் 9-ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ள சதவீதம் வருமாறு, பொதுவாக காலாண்டு தேர்வுக்கு 40 சதவீத பாடங்களும், அரையாண்டு தேர்வுக்கு 40 சதவீத பாடங்களும், எஞ்சியுள்ள 20 சதவீத பாடங்களை சேர்த்து முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு காலாண்டு தேர்வுக்கு 25 சதவீத பாடங்களும், அரையாண்டு தேர்வுக்கு 40 சதவீத பாடங்களும், முழு ஆண்டுத் தேர்வுக்கு எஞ்சியுள்ள 35 சதவீத பாடங்களும் நடத்தப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications