விஜயகாந்த்துக்கு எதிராக தலித் தேமுதிகவினர் கொந்தளிப்பு- கொடிமரங்கள் வெட்டி சாய்ப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூற தேமுதிக தலைவர் விஜயகாந்த வராததால் ஆத்திரமடைந்த அக்கட்சியைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்து கட்சி கொடிமரங்களை வெட்டிச் சாய்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அடுத்த காரனேந்தல் கிராமத்தை சேர்ந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தே.மு.தி.க. தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் இதுவரை பரமக்குடி வராததை கண்டித்து அதிருப்தியில் இருந்து வந்தனர்.
மேலும், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த்த தேவையில்லை என்று பேசியதால் அவர்கள் மேலும் ஆத்திரமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் மதுரை சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை மட்டும் பார்த்தார். ஆனால் பரமக்குடி வரவில்லை.
இதனால் காரனேந்தல் பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்தனர். கிளைச் செயலாளர் முருகேசன் தலைமையில் விஜயகாந்த்தைக் கண்டித்துப் போராட்டத்தில் குதித்த அவர்கள் கட்சி உறுப்பினர் கார்டுகள், கட்சிக் கொடிகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். மேலும் கட்சி கொடி மரங்களையும் வெட்டிச் சாய்த்தனர்.
இதேபோல காவனூர், வன்னிவயல் ஆகிய பகுதிகளிலும் தேமுதிகவினர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு நிலவியது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications