வீட்டு வாசலில் விளையாடிய வங்கி ஊழியரி்ன் 2 வயது மகள் கடத்தல்
சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த வங்கி ஊழியரின் 2 வயது மகள் மாயமானதால் பரபரப்பேற்பட்டுள்ளது.
விருகம்பாக்கம், மஜீத் நகர் வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறார். அவரது மனைவி வசந்தி. அவர்களுக்கு கவிதா என்கிற 2 வயது மகள் இருக்கிறாள்.
நேற்று காலை கணேசன் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் வசந்தியும், கவிதாவும் மட்டும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் கவிதா வீட்டு வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருக்க வசந்தி சமையல் செய்து கொண்டிருந்தார்.
சமையலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தை கவிதாவை காணவில்லை. உடனே பதறிப்போன வசந்தி அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடினார். ஆனால் பலனில்லை. கணேசனுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் யாராவது குழந்தையை கடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து கணேசன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் தலைமையிலான போலீசார் குழந்தையைத் தேடி வருகின்றனர்.
குழந்தையைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 98404 79998 என்ற எண்ணில் அல்லது போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications