வடமாநிலங்களில் முட்டை தேவை அதிகரிப்பதால் 5 பைசா விலை அதிகரிப்பு
நாமக்கல்: வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் முட்டை வியாபாரிகள் மற்றும் பண்ணையாளர்கள் கூடி முட்டை விலை நிர்ணயம் குறித்து ஆலோசித்தனர்.
இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்லி கொல்கத்தா, மும்பை, மீராஜ் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து விஜயவாடா, ஹைதராபாத் ஆகிய கொள்முதல் மண்டலங்களில் முட்டை விலை அதிகரித்து வருகிறது.
இந்திய முழுவதும் முட்டை தேவை அதிகரித்துள்ளதால், நாமக்கல் பண்ணை விலையிலும் முட்டைக்கு 5 பைசா உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2.52 பைசா என இருந்த முட்டை விலை 2.57 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கறிக்கோழி விலையில் 3 ரூபாய் குறைத்து 34 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்ணையில் இருந்து விற்கப்படும் கோழிகளுக்கு 2 ரூபாய் குறைத்து 32 ரூபாய் என விற்கலாம். அதற்கு குறைவாக எந்த பண்ணையாளரும் விற்க வேண்டாம். வட மாநிலங்களில் வரும் நாட்களில் தேவை அதிகரித்து வரும் நிலையி்ல் முட்டை விலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications