வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது மத்திய அரசு

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோ ரூ. 25-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு வெங்காய ஏற்றமதிக்கு கடந்த 9-ம் தேதி தடை வதித்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிரிப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் கே. வி. தாமஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்தார்.
அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதித்தவுடன் டெல்லியில் வெங்காய விலை சரிந்து கிலோ ரூ. 2 முதல் 5 வரை விற்பனையானது. வெங்காயத்தை அதிக அளவில் பயிரிடும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாசிக் மற்றும் பெங்களூர் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் வெங்காயத்தை சந்தைக்கே கொண்டு வராமல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தான் மத்திய அரசு தடையை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications