நில அபகரிப்பு: திமுக கவுன்சிலர் தலைமறைவு, மனைவி கைது
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் திருமலை தலைமறைவாகியுள்ளார். அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலை (52). திமுக ஒன்றிய கவுன்சிலர். கட்சியின் ஒன்றியப் பொருளாளராகவும் உள்ளார். ஆலப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது மனைவி இந்துமதி(37).
திருமலை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இருகின்றப்பள்ளி கிராமத்தில் கதிர்வேலு என்பவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு மதில் சுவரும் கட்டினார். சென்னையைச் சேர்ந்த 4 பேர் அபகரித்த இடத்திற்கு போலி பத்திரம் தயாரித்துக் கொடுத்துள்ளனர். அதை பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
நிலத்தை பறிகொடுத்த கதிர்வேலுவின் மகன் தமிழ்மணி இது குறித்து காஞ்சீபுரம் எஸ்பியிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மாவட்ட நில அபகரி்ப்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தமிழ்மணியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலி பத்திரம் தயாரித்துக் கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் வருவதற்குள் திருமலை தலைமறைவாகிவிட்டார். அவரது மனைவி இந்துமதி கைது செய்யப்பட்டார். போலீசார் திருமலையை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications